அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது : ஆர்.எஸ்.பாரதி
அதிமுக ஆட்சியின் போது சென்னை கோயம்பேட்டில் உள்ள 10.5 ஏக்கர் அரசு நிலம் சட்ட விரோதமாக தனியாருக்கு கொடுக்கப்பட்டதால் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மீது அளித்த புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜரானார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் விதிமீறல்கள் இருப்பதாக குற்றம் சாட்டினார். புகார் தொடர்பாக மூவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர் எஸ் பாரதி கேட்டுக்கொண்டார்.






