இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் இந்திய மாணவி உள்பட 9 பேர் உயிரிழப்பு..!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் இந்திய வம்சாவளி மாணவி உட்பட 9 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 22 வயதான மாணவி கடந்த ஐந்தாம் தேதி ராப் பாடகர் இசை நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார்.
ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த அரங்கில் திடீரென கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த நெரிசலில் சிக்கி கீழே விழுந்த மாணவிக்கு தலையில் பலமாக அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது.






