--- --:--:-- --

நடிகர் சரத்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

12

சென்னை கொட்டிவாக்கத்தில் நடிகர் சரத்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்துள்ளனர். கொட்டிவாக்கத்தில் நடிகர் சரத்குமாரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

 

இதனையடுத்து சரத்குமாரின் வீட்டில் சோதனை செய்தபோது அது புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் விக்னேஷ் என்பது தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon