--- --:--:-- --

திருமணமானதை மறைத்து பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர்..!

3

யிலாடுதுறையில் திருமணம் ஆகவில்லை என ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு தப்பியோடிய நபர் மீது பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி புகார் அளித்துள்ளார் . மயிலாடுதுறை மாவட்டம் திருக்குவளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

 

இவரும், இளைஞர் ஒருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளையபாரதி திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

பாதிக்கப்பட்ட பெண் இளையபாரதி கிராமத்திற்கு சென்று விசாரித்த போது அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறித்து அதிர்ச்சி அடைந்தார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் கல்லூரி மாணவி சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Right Menu Icon