--- --:--:-- --

கண்டித்த பேருந்து ஓட்டுனரை தாக்கிய மாணவர்கள்..!

4

பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை கண்டித்த பேருந்து ஓட்டுனரை மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூர் நோக்கி சென்ற பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர்.

 

அவர்களை உள்ளே வரும்படி பேருந்து ஓட்டுநர் மோகனகிருஷ்ணன் கூறியுள்ளார். கண்டுகொள்ளாத மாணவர்கள் தொடர்ந்து படிக்கட்டில் பயணித்ததாக கூறப்படுகிறது. இதனால் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் மாணவர்களை உள்ளே ஏறும்படி வற்புறுத்தியுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த சில மாணவர்கள் சாலைகளில் கிடந்த கல்லை எடுத்து ஓட்டுநரை தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் லேசான காயம் அடைந்த ஓட்டுனர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Right Menu Icon