போதைப்பொருள் வழக்கில் சிக்கிய வில்லன் நடிகர்..!
தமிழில் சிங்கம், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களில் நடித்த வில்லன் நடிகர் போதைப்பொருள் வழக்கில் பெங்களூரிலுள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னடம், இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்தவர்.
நைஜீரியா நாட்டை சேர்ந்த இவர் மெடிக்கல் விசாவில் இந்தியாவிற்கு வந்துள்ளார். பெங்களூருவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் போதை பொருட்களை விற்பனை செய்து கையும் களவுமாக சிக்கினார்.
அப்பொழுது அவரது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள், செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சினிமாவில் கடத்தல்காரர் ஆக இருந்தாலும் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.






