--- --:--:-- --

7 வயது முதல் 17 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி..!

4

ஏழு வயது முதல் 17 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனையை மேற்கொள்ள முதல் முறையாக நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதியளித்துள்ளது. மூன்று அலையில் சிறுவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் அவர்களின் பாதுகாப்புக்காக தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் சைடிஸ் கேடிலா நிறுவனத்தின் தயாரிப்பான டிஎன்ஏ தடுப்பூசியை 12 வயது முதல் 17 வயது சிறுவர்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சீரம் நிறுவனமும் இதே வயதினருக்கான தடுப்பூசி பரிசோதனைக்கான அனுமதியைப் பெற்றுள்ளது.

 

அந்த நிறுவனம் மேற்கொண்ட பரிசோதனையின் அடிப்படையில் 100 சிறுவர்களுக்கான தடுப்பூசியை செலுத்தியது. இதில் ஆக்கபூர்வமான முடிவுகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் தற்போது சீரம் நிறுவனம் ஏழு வயது முதல் 17 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசிக்கான பரிசோதனை நடத்த உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon