வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி இன்று முழு அடைப்பு போராட்டம்..!
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் 300 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
இதில் புதிய சட்டங்களை ரத்து செய்ய கோரி நாடு முழுவதும் இன்று விவசாயிகள் கூட்டமைப்பான சம்யுக்தான் கிசான் மோச்சா அழைப்பு விடுத்தது. இந்த போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேபோல் அகில இந்திய அமைப்பில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும், பாமக, தேமுதிக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.






