--- --:--:-- --

பிரதமர் மோடி மற்றும் ஸ்காட் மோரிசன் இடையே நடந்த முக்கிய பேச்சுவார்த்தை என்ன..?

3

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரை சந்தித்து பேசும் பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபர்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

 

குவாட் மற்றும் முக்கிய மாநாடுகளில் பங்கேற்க அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு வாஷிங்டனில் உள்ள விமான தளத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

 

பின்னர் அமெரிக்காவின் முக்கிய தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இந்த இது சந்திப்பு தனித்தனியாக நடைபெற்றது.

 

டிஜிட்டல் இந்தியா மற்றும் சுகாதாரம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

இருதரப்பு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்கள் விவாதித்துள்ளனர். பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றம் குறித்தும் வர்த்தகம் பாதுகாப்பு இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon