--- --:--:-- --

திருவண்ணாமலையில் 11-ம் வகுப்பு மாணவருக்கு கொரொனா..! 3 நாட்களுக்கு பள்ளி விடுமுறை..!

4

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதால் மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆரணி டவுன் கோட்டை சாலையில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவருக்கு லேசான காய்ச்சல் இருந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

அதில் மாணவருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதியானதால் பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டது. சக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரொனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon