--- --:--:-- --

பிரபல சொகுசு விடுதி பணியாளர் மர்ம மரணம்..!

5

நாகை அருகே ஓஎன்ஜிசி நிறுவன தொழில் சங்க தலைவருக்கு சொந்தமான பிரபல சொகுசு விடுதியில் பணியாளர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அடுத்துள்ள கருவெலங்கடை பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தொழிற் சங்கத்தின் தலைவர் சேதுபதி என்பவருக்கு சொந்தமான சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ஆலங்குடி கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

 

வழக்கம்போல நேற்று வந்த தினேஷ்குமார் ஓய்வறைக்கு சென்று வருவதாக சக பணியாளர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரண்டு மணி நேரமாக திறக்காமல் இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த பணியாளர்கள் கதவை உடைத்துப் பார்த்தனர்.

 

அப்பொழுது தினேஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உள்ளனர். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புகாரை பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon