--- --:--:-- --

வீட்டில் அழுகிய நிலையில் இருந்த ஃபைனான்ஸ் அதிபரின் உடல்..!

6

திண்டுக்கல்லில் வட்டிக்கு கடன் கொடுத்து வந்த நபரின் உடலை அவரது வீட்டில் அழுகிய நிலையில் மீட்ட காவல்துறையினர் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணியை சேர்ந்த 43 வயதான பிரபாகரன் என்பவர் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

 

இவரது மனைவி சுமதி பிரபாகரன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இரண்டு பிள்ளைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மூன்று மாதங்களாக வீட்டில் தனியாக இருந்த பிரபாகரன் கடந்த இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை.

 

இந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரை வரவழைத்தனர். தாழ்ப்பாள் போடாமல் இருந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் அழுகிய நிலையில் இருந்த பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon