--- --:--:-- --

தடுப்பூசி போடாத சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு செல்ல தடை..!

5

தடுப்பூசி போடாத சுற்றுலா பயணிகளை கொடைக்கானலுக்குள் சுகாதாரத்துறை அனுமதிக்கவில்லை. இதனால் நிறுத்தப்பட்ட காரால் பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

கட்டுப்பாடுகளை தளர்த்தியதையடுத்து கொடைக்கானலுக்குள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் வழியில் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

இதில் தடுப்பூசி செலுத்தாத சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்குள் செல்ல அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டதால் பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon