ஊரக உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து அதிமுக வழக்கு ..!
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற விருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் பாதுகாப்பு பணிக்கு சிஆர்பிஎஃப் வீரர் களை பயன்படுத்த வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்தக்கூடாது என்றும் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது கள்ள ஓட்டு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





