நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை..!
அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை என தகவல் வெளியாகி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் சாத்தபாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வு எழுதியுள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளி அளவில் முதலிடம் பெற்று 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவி அச்சத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.






