--- --:--:-- --

புகார்களை காவல் துறைக்குத் தெரிவிக்க கைபேசி செயலி உருவாக்கப்படும்..!

4

பொதுமக்கள் தங்களுடைய புகார்களை காவல் துறைக்குத் தெரிவிக்க கைபேசி செயலி ஒன்று உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். காவல் துறை மீதான மானியக் கோரிக்கைகள் முக்கியமான அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.

 

அதில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் போலீசாருக்கு சென்னை அண்ணா மேலாண்மை மையத்தின் மூலமாக பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்தார்.

 

பொதுமக்கள் தங்களுடைய புகார்களை காவல்துறைக்கு கூற கைபேசி செயலி உருவாக்கப்படும் எனவும் அதன் காணொளி மூலமாக பேசும் வசதி இடம்பெறும் எனவும் தெரிவித்தார். அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon