உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை அனுமதிக்க கூடாது..!
உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க கூடாது என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒன்பது முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அரசு நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி வழக்கமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரொனா அதிகரிக்கும் நிலையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க கூடாது என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.






