பிஹெச்டி, மாஸ்டர்ஸ் பட்டங்களுக்கு மதிப்பில்லை – ஆப்கானின் புதிய கல்வி அமைச்சர்
பிஹெச்டி, மாஸ்டர்ஸ் பட்டங்களுக்கு மதிப்பில்லை என்று ஆப்கானின் புதிய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்தகாலங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய ஹக்கானி குழுவில் இடம் பெற்றிருந்த பலர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நபர் வீடியோ ஒன்றில் பிஹெச்டி முதுகலை பட்டங்கள் இன்று மதிப்பிழந்து விட்டதாக கூறியுள்ளார்.
தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள யாரும் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் அல்ல என்றும் பள்ளிக் கல்வி சான்று கூட இல்லாவிட்டாலும் இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.






