--- --:--:-- --

ஆன்லைன் நூதன மோசடியில் சிக்கிய துணை நடிகர்..!

7

விரைவாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆன்லைன் நூதன மோசடியில் சிக்கிய துணை நடிகர் ஒருவர் லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். உடல் உழைப்பும் இன்றி விரைவாக பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் இருப்போரை குறிவைத்து ஏராளமான விளம்பரங்கள் ஆன்லைனில் உலா வருகின்றன.

 

அப்படி ஒரு விளம்பரத்தை நம்பி ஏமாந்த நிற்கிறார் சென்னை வடபழனி சிறந்த துணை நடிகர் சீனிவாசன். திரைப் படங்களில் நடிப்பதோடு திருமண நிகழ்ச்சிகளில் யூடியுப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யும் பணி செய்து வந்த சீனிவாசனுக்கு பத்து நிமிடத்தில் 200 ரூபாய் ஒரு நாளில் 8,000 ரூபாய் சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி வந்துள்ளது.

 

குறிப்பிட்ட பொருளின் மீது முதலீடு செய்தால் அதை பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மூலம் விற்பனை செய்து லாபம் ஈட்டலாம் என்பதே. இதை நம்பி 90 ஆயிரம் ரூபாய் வரை செலுத்திய சீனிவாசனுக்கு எந்த பணமும் கிடைக்கவில்லை.

Leave a Reply

Right Menu Icon