--- --:--:-- --

இன்ஸ்டாவில் 15 கோடி பாலோயர்ஸ்களை பெற்று சாதனைப்படைத்த விராட் கோலி..!

6

15 கோடி பின் தொடர்பவர்களை பெற்ற முதல் ஆசிய நபர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் இன்று விளையாட்டு பிரபலங்கள், திரைக்கலைஞர்கள் உள்ளிட்டவர்களை ரசிகர்கள் உட்பட பலர் பின் தொடர்கின்றனர்.

 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 15 கோடி பின்தொடர்பவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

 

இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்கள் கொண்ட முதல் ஆசிய நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உலக கால்பந்து வீரர் ரொனால்டோ மெஸ்ஸி நெய்மரை தொடர்ந்து அதிக பின்தொடர்பவர்கள் கொண்ட நான்காவது நபராக கோலி வந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon