ராணுவ ஹெலிகாப்டரில் உடலை தொங்கவிட்டு சென்ற தாலிபான்கள்..!
அமெரிக்கா விட்டு சென்ற ராணுவ ஹெலிகாப்டரில் அமெரிக்க அதிகாரிகளுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்த ஆப்கானியரின் உடலை தொங்கவிட்டவாறு காந்திநகரில் தாலிபான்கள் கொண்டு சென்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதில் தங்களது விமானப்படை என தலைப்பிட்டு தங்களது காட்சியை வெளியிட்டு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். காபூலில் தாங்கள் விட்டுவிட்டு வந்த ராணுவ விமானங்கள் மற்றும் தளவாடங்களை தாலிபன்கள் காட்சிப் பொருளாக மட்டுமே வைக்க முடியும் என்றும் அவற்றை அவர்களால் ஏற்க முடியாது என்று அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் செய்தித் தொடர்பாளர் முன்னதாக கூறியது இதன்மூலம் பொய்த்து விட்டதாக வெளியிட்ட வீடியோ காட்சி உறுதிப்படுத்துவதாக கருதப்படுகிறது.
இதனிடையே திகிலூட்டும் வகையில் இருக்கும் இந்த வீடியோ ஆப்கன் விவகாரத்தில் அதிபர் ஜோபைடன் படுதோல்வியானதை உறுதி செய்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார். ஒரு மனித உடல் ஹெலிகாப்டரில் தொங்கும் காட்சி துயரமானதும் அது கற்பனைக்கு எட்டாதது என கூறியுள்ளார்.






