ஆஸ்திரேலியாவில் மீண்டும் கொரொனா பரவலால் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு..!
ஆஸ்திரேலியாவில் மீண்டும் கொரொனா அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதல் அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி ஆஸ்திரேலியா இரண்டாவது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது.
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மேலும் அந்த கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறுவோருக்கு ஐந்தாயிரம் ஆஸ்திரேலியன் டாலர்கள் தண்டனையாக விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






