--- --:--:-- --

ஆந்திராவில் ஓராண்டிற்கு பிறகு பள்ளிகள் திறப்பு..!

4

ஆந்திராவில் கொரொனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

 

கோதாவரி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு சென்ற முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார் .தேங்க்யூ மாமா என்ற பதாகைகளை ஏந்தியவாறு அவர் குழந்தைகளுக்கு முன்பு இருந்த பலகையில் எழுதி முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்தார்.

 

இதனை தொடர்ந்து கல்வி காணிக்கை என்ற பெயரில் நோட்டுப்புத்தகம், மூன்று ஜோடி சீருடைகள், ஒரு ஜோடி ஷூ இரண்டு ஜோடி சாக்ஸ் மற்றும் புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon