கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும்..!
கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என பாகிஸ்தானில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இதுவரை 10 லட்சத்து 58 ஆயிரத்து 45 பேர் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
9 லட்சத்து 54 ஆயிரத்து 711 பேரும் மீண்டு உள்ளனர். 23 ஆயிரத்து 72 பேர் உயிரிழந்தனர். அங்கு கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு முகாம்களில் ஏற்ப வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என பாகிஸ்தான் மக்கள் நலவாழ்வு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனிடையே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாவிட்டால் செல்போன் அழைப்பு, துண்டிப்பு, அலுவலகம் வர அனுமதி மறுப்பு, ஊதியம் கிடையாது, ஓட்டல்கள், வணிக வளாகங்களில் நுழைய அனுமதி ரத்து போன்ற அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.






