--- --:--:-- --

கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு..!

1

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடிக்கும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த படத்தை கே.எஸ். ரவிக்குமார் தயாரிக்கிறார்.

 

ரவிக்குமாரின் உதவி இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர்.

 

தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிக் பாஸ் தர்ஷன் லாஸ்லியா மற்றும் யோகிபாபு மனோபாலா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon