ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும்..!
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்ஃபில் படிப்பை தொடர்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.






