--- --:--:-- --

விருதுநகரில் பட்டாசு விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!

10

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அனுமதியில்லாமல் பட்டாசுகளை தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சாத்தூர் அருகே தாயில்பட்டி கலைஞர் காலனி பகுதியில் பிரபாகரன் என்பவர் சட்டவிரோதமாக சிறிய ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

 

ரசாயன உராய்வால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் பெண்களும் 5 வயதான குழந்தையும் உயிரிழந்தனர். அனுமதி இல்லாமல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டதாக பிரபாகரன், அப்பல்லோ, சூர்யா உள்ளிட்ட மூன்று பேர் மீது 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

இவர்களில் அப்பல்லோ என்பவர் கைது செய்யப்பட்டு விட்ட நிலையில் பிரபாகரன் மற்றும் சூர்யா இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon