நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது – சூர்யா
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும் அந்த தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவிடம் முறையிட வேண்டும் என்றும் நடிகர் சூர்யா வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கையில் ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாட நீட்தேர்வு கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.
நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதிபதிகளிடம் முறையிட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அரசு மாணவர்களோடு இணைந்து பயணிக்கும் அகரம் பவுண்டேஷன் அரசு அமைத்த குழுவிடம் நீட் பாதிப்புகளை பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் கிடைத்தது. இன்னொரு விதமான கல்வி வாய்ப்பும் இருப்பது கூடாது என்று கூறியிருக்கும் அவர் தகுதியை தீர்மானிக்கும் முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.
பன்னிரண்டாம் ஆண்டு பள்ளிக் கல்வியை பயின்ற பிறகும் நுழைவுத்தேர்வு மூலமாகவே உயர் கல்விக்குச் செல்ல முடியும் என்பது சமூக நீதி என்று கூறியுள்ளார். மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவுகள் நீட் தேர்வால் தீ வைக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.







