--- --:--:-- --

இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு..! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

1

மிழகத்தில் கொரொனா பரவல் குறைந்து வருவதையொட்டி 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மதுபானம் வாங்க வருவோர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என இரண்டு ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும்.

 

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. டாஸ்மாக் மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த கட்டாயம் தடுப்பு வேலி அமைக்க வேண்டும், முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மதுபானங்களை வழங்கக்கூடாது.

 

சில்லரை விற்பனைக் கடைகளில் மதுபானம் வாங்க வருவோருக்குஅதிக அளவில் மதுபானங்களை விற்கக் கூடாது என வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon