--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

12

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கன்னியாகுமரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

 

தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அதிகளவு பெய்யக்கூடும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon