--- --:--:-- --

ஊரடங்கின் போது இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞருக்கு தர்ம அடி..!

13

ஊரடங்கின் போது இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞருக்கு போலீசார் ஒருவர் தர்மஅடி கொடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆந்திராவில் பிற்பகல் 12 மணியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

 

இந்த நிலையில் கடப்பாவில் கடந்த 25ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த துணை காவல் ஆய்வாளர் ஜீவன் ரெட்டி கூறுகையில் இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த இளைஞரை பிடிக்க முயற்சித்தார்.

 

ஆனால் போலீசாரை கண்டதும் வண்டியை அவசரமாகத் திரும்பி சென்ற இளைஞர் தவறி கீழே விழுந்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத அவர் இளைஞரை வெளுத்து வாங்கிய சிசிடிவி காட்சிகள் வைரலானது. இதனையடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon