மதுரையில் கொரொனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்..!
மதுரை தோப்பூரில் 11 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரொனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.
மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே உள்ள கொரொனா சிகிச்சை மையத்திற்கு அருகில் 500 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட புதிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மின்விசிறி, கழிப்பறை வசதியுடன் அமைக்கப்பட்ட புதிய சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரொனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்.






