--- --:--:-- --

ஆசிரியர்களின் ஊதியத்தை பாதியாக குறைக்க கோரிக்கை..!

2

கொரொனா சூழலில் பணிகள் இல்லாத நிலையில் ஆசிரியர்களின் ஊதியத்தை பாதியாக குறைக்க வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கை குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் ஊரடங்கு காலத்தில் ஓராண்டுக்கு மேல் பணியில் இருக்கும் ஆசிரியர்களின் ஊதியத்தை பாதியாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்கு ஆசிரியர்களின் ஊதியத்தை பாதியாக குறைத்து முன் களப் பணியாளர்களுக்கு ஊதியத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு வாட்ஸ் அப் மூலம் அறிவுறுத்தல்கள் வந்தவண்ணம் உள்ளது என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon