தமிழகத்தில் இன்று 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..397 பேர் உயிரிழப்பு…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,34,804 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 6,073 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 25,368 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 397 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 19,131 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




