--- --:--:-- --

மக்கள் டாக்டர் பார்த்தசாரதி கொரொனா தொற்றால் உயிரிழப்பு..!

6

வடசென்னையில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் பார்த்தசாரதி கொரொனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 84. சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் பார்த்தசாரதி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

 

பின்னர் வண்ணாரப்பேட்டை பகுதியில் தமது இல்லத்திலேயே சிறிய அளவிலான மருத்துவமனை அமைத்து எளிய மக்களுக்கு அவர் இலவசமாகவே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அமெரிக்கா, லண்டன் சென்று மருத்துவம் படித்த டாக்டர் பார்த்தசாரதி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நான்கு தலைமுறை மக்களுக்கு சேவை புரிந்து வந்தார்.

 

கடந்த ஒரு வாரமாக கொரொனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்தவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததால் காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 

அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்ற போது அவரிடம் சிகிச்சை பெற்று ஏராளமான பொதுமக்கள் கூடி கதறி அழுதனர். உடனடியாக அவரது உடல் காசிமேடு மயானத்தில் இறுதிச் சடங்கிற்காக கொண்டுசெல்லப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon