கொரொனாவால் உயிரிழந்த மனைவி..! சோகத்தால் கணவரும், மகனும் தற்கொலை..!
தஞ்சையில் மனைவி கொரொனாவால் உயிரிழந்த சோகத்தில் கணவரும், மகனும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்புவனம் அருகே உள்ள நரங்கிபட்டியை சேர்ந்த மீனா தனது கணவர் மற்றும் மகனுடன் கிருஷ்ணகிரியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் கொரொனாவால் பாதிக்கப்பட்ட மீனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கணவர் கனகராஜ் மற்றும் மகன் மனோஜ் குமார் இருவரும் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் மீனாவிற்கு 30வது நாள் காரியம் செய்துள்ளனர்.
இருவரும் இறந்த நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சடலங்களை கைப்பற்றி விசாரணை செய்தபோது மீனா இறந்ததால் உச்சகட்ட மனவேதனையில் இருந்ததால் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.




