--- --:--:-- --

5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

5

புதிய புயல் காரணமாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் ஆறுபோல் விரைந்து ஓடுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது.

 

இதனால் கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். கோழிக்கோட்டில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon