வி.சி.க. மாநில பொருளாளர் முகமது யூசுப் கொரொனாவால் பலி..!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் கொரொனா பாதிப்பால் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு கொரொனா பாதிப்பு உறுதியானதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் விசிக மாநில பொருளாளர் முகமது யூசுப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பல அரசியல் கட்சியினர் யூசுப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






