முன்னாள் மத்திய அமைச்சரான அஜித் சிங் காலமானார்..!
ராஷ்டிரிய லோக் தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங் காலமாகிவிட்டார். ஏப்ரல் 20 ஆம் தேதி கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட அஜித் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அஜித்சிங் உத்தரபிரதேச மாநிலத்தில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர். குறிப்பாக விவசாயிகளுக்கு தலைவராக பிரதிநிதியாக செயல்பட்டு வந்தார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் விமானப் போக்குவரத்துத் துறையின் அமைச்சராக இருந்தார்.
அதற்கு முன்பு வாஜ்பாய் அரசு நரசிம்மராவ் அரசிலும் அவர் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் காலமாகி உள்ளார்.






