--- --:--:-- --

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு..!

2

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி கோரும் வழக்கில் உச்ச நீதிமன்ற விசாரணை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

இன்று காலை 9:15மணியளவில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தாவின் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய விசாரணை நடத்த உள்ளது.

 

அப்போது தமிழகத்தின் தரப்பில் முன்வைக்க வேண்டிய வாதங்கள் தொடர்பாக கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்கப்படும் எனவும் அதன் பிறகு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக அரசே ஆலையை ஏற்று நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் யோசனை கூறியிருந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

 

இந்த கூட்டத்தில் திமுக சார்பில் தூத்துக்குடி எம்பி கனிமொழி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்‌எஸ் பாரதி பங்கேற்பார்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். இது தவிர காங்கிரஸ் பாஜக இடதுசாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon