கொரொனா இரண்டாவது அலையை இந்தியா வெற்றி கொள்ளும்..!
கொரொனா முதல் அலையை வெற்றி கொண்டதுபோல் இரண்டாவது அலையை இந்தியா வெற்றி கொள்ளும் என முழுமையாக நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரல் என்ற பெயரிலான மாதாந்திர வானொலி முறையில் பேசிய அவர் பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டார்.
கொரொனா புதிய அலையை சமாளிப்பதற்காக அறிவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் தரும் ஆலோசனை முக்கியத்துவம் தந்து அவற்றை அரசு செயல்படுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நிலைமையை சமாளிப்பதற்கு மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு முழுவீச்சில் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
வதந்திகள் பரப்பப் பட்டு வருவதாகவும் அவற்றைப் புறக்கணித்து விட்டு மக்கள் தயங்காமல் ஊசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இனியும் இலவசம் தொடரும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் உடனிருந்தனர். தொலைபேசி மூலம் பேசி அவர்களது கருத்துக்களை நாட்டு மக்களும் அறியச் செய்தார்.






