ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாயை பறிமுதல் செய்த பறக்கும் படை..!
புதுச்சேரியில் உரிய ஆவணம் இன்றி வங்கியில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கதிர்காமம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தனியார் வங்கி வாகனத்தை பறக்கும் படையினர் சோதனையிட்டுள்ளனர்.
அதில் நூறு, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக இரண்டு கோடி ரூபாய் ரொக்கம்இருப்பது தெரிய வந்தது. அந்த பணத்தை வங்கிக்கு கொண்டு செல்வதாக வாகனத்தில் இருந்தவர்கள் கூறினாலும் அதற்கான ஆவணங்களை அளிக்கவில்லை.
இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் இதுகுறித்த மேல் விசாரணைக்கு வருமானவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.






