--- --:--:-- --

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை..

3.1

நாடெங்கும் கொரொனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அது குறித்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். நாளை நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி முறையில் நிகழவுள்ளது.

 

கொரொனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விடுவது குறித்து பிரதமர் பேச உள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த நிலையை எட்டியுள்ளது.

 

நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 26 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாடெங்கும் 3 கோடியே 17 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

தற்போது தடுப்பூசி போடும் வேகம் மிகக் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளது. உள்நாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இப்படியே சென்றால் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட ஆண்டுகள் ஆகும் என கவலை தெரிவித்துள்ளது.

 

முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட பலர் இரண்டாவது தவணை போட்டுக் கொள்ள தவறி விட்டதாகவும் காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா தலைமையிலான நிலைக்குழு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon