குறைகளை தெரிவித்து தீர்வு காணும் உதவி மைய எண் 1100 பயன்பாட்டிற்கு வந்துள்ளது..!
தமிழக மக்கள் தங்களின் குறைகளை தெரிவித்து தீர்வு காணும் வகையிலான முதலமைச்சரின் உதவி மைய எண் 1100 இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
1100 அனைத்திற்கும் தீர்வு என்ற உறுதி மொழியுடன் பயன்பாட்டிற்கு வந்த இந்த எண் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்புகொண்டு எந்தத் துறை சார்ந்த குறைகளாக இருந்தாலும் மக்கள் தெரிவிக்கலாம். மக்கள் தெரிவிக்கும் குறைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் அல்லது மொபைல் செயலி வாயிலாகவும் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.






