பொள்ளாச்சியில் தனது கணவருடன் சாந்தி மெஸ்ஸில் உணவருந்திய நடிகை காஜல்..!
நடிகை காஜல் அகர்வால் பொள்ளாச்சியில் தனது கணவருடன் சாந்தி மெஸ்ஸில் உணவருந்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் தனக்கு மிகவும் பிடித்த உணவகம் தான் இந்த சாந்தி மெஸ் எனக் கூறியுள்ள அவர் உணவகத்தை நடத்தும் சாந்தி அக்காவும் பாலகுமாரன் அண்ணனும் உணவுடன் சேர்ந்து அன்பையும் பரிமாறுவதாக கூறியுள்ளார்.
இதன் காரணமாகவே கடந்த 27 ஆண்டுகளாக சாந்தி மெஸ்ஸில் இத்தனை ருசியாக உணவு இருப்பதாக காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளார்.







