--- --:--:-- --

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் அதிகரிப்பு..!

21

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் அதிகரிப்பு 35 ஆயிரத்து 752 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.

 

அந்தவகையில் இன்று சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து 35 ஆயிரத்து 752 ரூபாய்க்கும் கிராம் ஒன்றுக்கு 14 ரூபாய் அதிகரிப்பு 4 ஆயிரத்து 469 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

இதேபோல் வெள்ளியும் கிராமுக்கு 80பைசா அதிகரித்து 73 ரூபாய் 40 காசுக்கும் பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து 73 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon