விஜய்யின் 65வது படத்தில் பூஜா ஹெக்டேவா? ராஷ்மிகா மந்தனாவா?
விஜய் நடிக்க உள்ள 65வது படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான முதல் கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக சென்னையில் உள்ள பிரபல விடுதியில் நடைபெற்று வருகிறது. அதேபோல் படத்தின் நாயகிக்கான தேர்வும் நடைபெற்று வருகிறது. அதில் மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அதில் மாளவிகா மாஸ்டர் படத்தில் நடித்ததால் இயக்குனர் அவரை தவிர்த்து உள்ளார். மேலும் ராஷ்மிகா மந்தனாவிற்கு கால்ஷீட் பிரச்சினை இருப்பதால் பூஜாஹெக்டேவை நாயகியாக தேர்வு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.







