--- --:--:-- --

இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் விருதை பெற்றுள்ள சிறை அதிகாரி..!

10

கேரள மாநிலத்தை சேர்ந்த சிறை அதிகாரி ஒருவர் சிறந்த சேவைக்காக இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் விருது பெற்றுள்ளார். திருச்சூரை சேர்ந்த தாமஸ் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் கிளைச் சிறையில் சிறப்பு கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

 

1990ஆம் ஆண்டு சிறை பணியில் சேர்ந்து 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். சிறையில் நன்னடத்தைக்காக 23 க்கும் அதிகமான விருதுகளை பெற்றுள்ளார். 2005ஆம் ஆண்டு கேரள முதல்வரின் விருதை பெற்றுள்ளார்.

 

சிறை ஊழியர்கள் மற்றும் கைதிகளுடன் கனிவு, பணியில் காட்டும் அக்கறை, கடமை உணர்வு மற்றும் நேர்மைக்காக 2015ஆம் ஆண்டு தாமஸுக்கு குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது.

 

இரண்டாவது முறையாக தாமஸ் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். இந்த பெருமையை பெற்றுள்ள தாமஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

 

Leave a Reply

Right Menu Icon