27 பெண்களை கொலை செய்த கில்லர்..!
அடுத்தடுத்து 27 பெண்களை கொலை செய்து தலைமறைவாக இருந்த ராம் என்ற சீரியல் கொலைகாரனை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பணம், நகைக்காக 16 கொலைகளை செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதர பெண்களை சொத்துக்காக கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன இரண்டு பெண்கள் குறித்து புகார் பெற்று விசாரணையை தொடங்கிய போலீசார் காணாமல் போன மேலும் பல பெண்களின் பட்டியலை தயாரித்தனர். அப்போது 21 பேரையும் படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.







