--- --:--:-- --

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பா ஜ க மாநில மருத்துவரணி செயலாளர் ராம்குமார் காமாட்சிபுரம் மக்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்

5.2

ஆயுஷ்மான் பாரத் அல்லது ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற பெயரிலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை கடந்தாண்டு தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாளான செப்டம்பர் 25ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

 

ஆனால், தமிழகம் போன்ற பல மாநிலங்களில் ஏற்கனவே மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பாரத பிரதமர் திட்டத்தில் பங்கேற்கும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் அளவுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும்.

 

இந்தத் திட்டப் பயனாளிகளுக்கு இதற்கென அட்டை ஒன்று வழங்கப்படும். மருத்துவமனைகள், மாநில அரசுகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

இந்தத் திட்டத்தில் இணைவோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணமின்றி சிகிச்சையளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்போ, நோயின் நிலையோ முக்கியமல்ல. என கூறப்படுகிறது.

 

இந்த காப்பீடு திட்டம் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க வில்லை கூறப்படுகிறது இந்நிலையில் பா ஜ க மாநில மருத்துவரணி செயலாளர் ராம்குமார் இதற்கு முனைப்பு காட்டி செயல்பட்டு வருகிறார்.

 

இந்நிலையில் நேற்று முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட காமாட்சிபுரம் மக்களுக்கு காப்பீடு அட்டையினை வழங்கினார்.இந்நிகழ்வில் வழக்கறிஞர் சிவராமகிருஷ்ணன் உடனிருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon